சாகித்ய அகாடமி விருது பெறும் ‘சூல்’ படைத்த படைப்பாளி சோ.தர்மன் அவர்களுக்கு அறிவுடைமையின் வாழ்த்துகள்!
2019-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் சோ. தர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் தென்கோடியிலுள்ள மக்களின் வேளாண்மையோடு ஒன்றரக் கலந்த வாழ்க்கையையும், அவர்களது இயற்கை சார்ந்த அறிவையும், நீர் மேலாண்மையில் அவர்களுடைய ஆழ்ந்த புலமையையும், நவீன அறிவியலால் அவையெல்லாம் காணும் சரிவுகளையும் அந்த நிலத்தின் மணத்தோடு பேசும் ‘சூல்’ நாவலை ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.