தமிழ் நதிக்கு அறிவுடைமை, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் வாழ்த்துக்கள்
தமிழ் நதியின் சிறுகதைத் தொகுப்பாகிய ‘மாயக்குதிரை’க்கு, நியூஸ் 18’ தொலைக்காட்சி நிறுவனம் சிறந்த படைப்புக்கான மகுடம் விருதினை வழங்கிக் கௌரவித்து இருக்கிறது.
இவ் விருது விழா நேற்று (அக்டோபர் 26, 2018) கிண்டியிலுள்ள I.T.C.Grand Chola இல் நடைபெற்றது. பெருமதிப்பிற்குரிய தோழர் தொல். திருமாவளவனின் கைகளால் விருதினைப் பெற்றுக்கொண்டார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும் தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களும் வாழ்த்திப் பேசினார்கள்.
தமிழ் நதி மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.