Home

—செய்திகள்—

உற்றுயிர்த்துத் தேடலாகி-விஜயராணி ஐ.ஏ.எஸ்

'காதல் ' ஒரு அழகான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அரும்பும் அழகான புரிதல்,நேசம்...எத்தனையோ பேரைக் சந்திக்கிறோம்,எத்தனையோ பேரைக் கடக்கிறோம்.ஆனால் எவரோ ஒருவரிடத்தில் தோன்றும்... வளரும்... இந்த அழகான நேசம் எல்லாமே பொதுவாய் நான்கு முடிவுகளுக்குள் கட்டுப்பட்டு விடும்.இனிதாய் இருவரும் கைகோர்த்து வாழ்க்கையை வாழக்கூடும் அல்லது இருவரைச் சார்ந்த உறவுகளின் பொருட்டு நேசம் மரித்துப் போக தாங்கள் எங்கோ வழக்கூடும் அல்லது இருவரில் ஒருவர் தங்களை சிறைபடுத்தும் சம்பிரதாய அலங்காரங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க மனதை மரணிக்க வைத்து பிரிந்து வழக்கூடும் அல்லது நேசத்தை வாழ வைப்பதாய் சொல்லிவிட்டு,தங்கள் மரணித்து போகக்கூடும்,இப்படித்தான் கிடக்கிறது காலம்கலமாய் இந்த காதல்,இதைப் பற்றி துளித்துளியாய் கவிதை வடிவில்,என்னை கடந்த,நான் கடந்த,கண்ட,கேட்டவற்றை உணர்ந்தவற்றை கவிதைகளாய் எழுத முயன்றிருக்கிறேன்.

‘காதல் ‘ ஒரு அழகான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அரும்பும் அழகான புரிதல்,நேசம்…எத்தனையோ பேரைக் சந்திக்கிறோம்,எத்தனையோ பேரைக் கடக்கிறோம்.ஆனால் எவரோ ஒருவரிடத்தில் தோன்றும்… வளரும்… இந்த அழகான
‘சூல்’ நாவல் விமர்சனம்

சாகித்ய அகாடமி விருது பெறும் 'சூல்' படைத்த படைப்பாளி சோ.தர்மன் அவர்களுக்கு அறிவுடைமையின் வாழ்த்துகள்!

2019-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் சோ. தர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் தென்கோடியிலுள்ள மக்களின் வேளாண்மையோடு ஒன்றரக் கலந்த வாழ்க்கையையும், அவர்களது இயற்கை சார்ந்த அறிவையும், நீர் மேலாண்மையில் அவர்களுடைய ஆழ்ந்த புலமையையும், நவீன அறிவியலால் அவையெல்லாம் காணும் சரிவுகளையும் அந்த நிலத்தின் மணத்தோடு பேசும் ‘சூல்’ நாவலை ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெறும் ‘சூல்’ படைத்த படைப்பாளி சோ.தர்மன் அவர்களுக்கு அறிவுடைமையின் வாழ்த்துகள்! 2019-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் சோ. தர்மன் தேர்வு
தமிழ் நதிக்கு வாழ்த்துக்கள்

தமிழ் நதிக்கு அறிவுடைமை, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் வாழ்த்துக்கள்

தமிழ் நதியின் சிறுகதைத் தொகுப்பாகிய ‘மாயக்குதிரை’க்கு, நியூஸ் 18’ தொலைக்காட்சி நிறுவனம் சிறந்த படைப்புக்கான மகுடம் விருதினை வழங்கிக் கௌரவித்து  இருக்கிறது.

இவ் விருது விழா நேற்று (அக்டோபர் 26, 2018) கிண்டியிலுள்ள I.T.C.Grand Chola இல் நடைபெற்றது. பெருமதிப்பிற்குரிய தோழர் தொல். திருமாவளவனின் கைகளால் விருதினைப் பெற்றுக்கொண்டார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும் தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களும் வாழ்த்திப் பேசினார்கள்.

தமிழ் நதி மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

தமிழ் நதிக்கு அறிவுடைமை, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் வாழ்த்துக்கள் தமிழ் நதியின் சிறுகதைத் தொகுப்பாகிய ‘மாயக்குதிரை’க்கு, நியூஸ் 18’ தொலைக்காட்சி நிறுவனம் சிறந்த படைப்புக்கான
ஜவாஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேருவினுடைய முழுமையான வாழ்க்கை வரலாறு JAWAHARLAL NEHRU என்ற பெயரில் திரு கோபண்ணா அவர்கள் எழுதி Nava India Publications வாயிலாக வெளிவந்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் முன்னுரை வழங்கியுள்ளனர். நேருவினுடைய குழந்தைப் பருவம் முதல் அரிய புகைப் படங்களோடு கூடிய ஆல்பமாகவும் இது விளங்குகிறது.விலை ரூ. 3000

ஜவஹர்லால் நேருவினுடைய முழுமையான வாழ்க்கை வரலாறு JAWAHARLAL NEHRU என்ற பெயரில் திரு கோபண்ணா அவர்கள் எழுதி Nava India Publications வாயிலாக வெளிவந்துள்ளது. முன்னாள் குடியரசுத்